

தெஹ்ரான்:
ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள அந்நாட்டின் பாராளுமன்றத்தின் மீது அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் இன்று காலை திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதற்கிடையே தெக்ரானில் மற்றொரு தாக்குதலும் நடைபெற்றது. அங்குள்ள மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் அருகே மறைந்த புரட்சியாளரும் மதகுருவுமான கோமெனியின் கல்லறை மாடம் உள்ளது. அங்கு புகுந்த தற்கொலை படை தீவிரவாதி தாக்குதல் நடத்தினான். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.
இந்த இரண்டு தாக்குதல்களில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 30-க்கும் அதிகமானோர் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண்மணியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், ஈரான் பாராளுமன்றம், புரட்சியாளர் கோமெனி கல்லறை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.