ஈராக் ராணுவத்தின் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் - 7 வீரர்கள் பலி

ஈராக் நாட்டின் அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 16 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
ஈராக் ராணுவத்தின் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் - 7 வீரர்கள் பலி
Published on

பாக்தாத்:

ஈரான் நாட்டின் பல்வேறு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மேற்கு பாக்தாத்தில் உள்ள அன்பர் மாகாணத்தில் ராணுவப் படைகளின் பல்வேறு நிலைகள் மீது தற்கொலை வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

ராமாடி அருகே நடந்த இந்த தாக்குதல்களுக்கு ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். பல மணிநேரம் நடைபெற்ற இந்த சண்டையில் 7 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். மேலும், 16 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

ராமாடி பகுதியில் இருந்து 2015-ம் ஆண்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியேற்றப்பட்ட நிலையில் சில இடங்களில் மட்டும் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com