

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கவுஹாத்தியில் நேற்று இரவு 8:00 மணிக்கு தொடங்கிய 40-வது லீக் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. - எப்.சி. கோவா அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் கவுஹாத்தி அணியின் மார்சின்ஹோ முதல் கோல் அடித்தார். அதன்பின் 28-வது நிமிடத்தில் கோவா அணியின் மனுவல் அரனா கொல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டம் 1-1 என சமனில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 52-வது நிமிடம் கவுஹாத்தி அணியின் சைமின்லென் டோன்கெல் ஒரு கோல் அடித்தார். இதனால் கவுஹாத்தி அணி 2-1 என முன்னிலை பெற்றது. அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்காததால் நார்த்ஈஸ்ட் யூனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.