ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா, நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற எப்.சி. கோவா, நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் 2-2 என சமனில் முடிந்தது. #ISL2017 #FCGoa #NorthEastUnitedFC
ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா, நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது
Published on

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று கோவாவில் நடைபெற்ற 64-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா - நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 42-வது நிமிடம் கோவா அணியின் மந்தர் ராவ் தேசாய் ஒரு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 45-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணியின் மர்சின்ஹோ கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டம் 1-1 என சமனானது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 53-வது நிமிடம் கோவா அணியின் பெர்ரான் கொரொமினஸ் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணியின் ஜான் மோஸ்கியூரா 71-வது நிமிடத்தில் மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்காததால் இந்த ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com