ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - கோவா இடையேயான போட்டி டிராவில் முடிந்தது

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா எப்.சி. மற்றும் எப்.சி. கோவா அணிகளுக்கிடையேயான போட்டி டிராவில் முடிந்தது.
ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - கோவா இடையேயான போட்டி டிராவில் முடிந்தது
Published on

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கொல்கத்தாவில் நேற்று இரவு 10:40 மணிக்கு தொடங்கிய 37-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா எப்.சி. - எப்.சி. கோவா அணியை எதிர்கொண்டது. 8 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த ஆட்டம் கோவா விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தினால் காலதாமதமாக தொடங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் ராபி கீன் முதல் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 24-வது நிமிடம் கோவா அணியின் பெர்ரான் கோரோமினஸ் கோல் அடித்தார். அதன்பின் முதல் பாதிநேர ஆட்டத்தில் எந்த கோலும் அடிக்கவில்லை.  

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணிகளுமே மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி 1-1 என சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com