

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கொல்கத்தாவில் நேற்று இரவு 8:00 மணிக்கு தொடங்கிய 38-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - எப்.சி. புனே சிட்டி அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் புனே அணியின் மார்செலொ பெரெய்ரா முதல் கோல் அடித்தார். அதன்பின் முதல் பாதிநேர ஆட்டத்தில் எந்த கோலும் அடிக்கவில்லை.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 73-வது நிமிடம் கேரளா அணியின் மார்க் சிப்னியோஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் இரு அணிகளுமே மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி 1-1 என சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.