ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 3-1 என வீழ்த்தியது பெங்களூரு எப்.சி.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 3-1 என வீழ்த்திய பெங்களூரு அணி ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது. #ISL2017 #FCPuneCity #NortheastUnitedFC
ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 3-1 என வீழ்த்தியது பெங்களூரு எப்.சி.
Published on

புதுடெல்லி:

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. புனேவில் இன்று இரவு 5:30 மணிக்கு தொடங்கிய 36-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - பெங்களூரு எப்.சி. அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. .

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் செத்ரி கோல் அடித்து அவரது அணிக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார்.

இப்போட்டியின் இறுதி நேர ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிக்கு அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார். இதனால் பெங்களூரு 3-0 என முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து கேரளா அணியின் கரேஜ் பெகுசன் ஆறுதல் கோல் அடித்தார். மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கப்படாததால் பெங்களூரு எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் பெங்களூரு அணி புள்ளிபட்டியலில், 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. சென்னையின் எப்.சி. அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. அடுத்ததாக 3-ம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா எப்.சி. - எப்.சி. கோவா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

#ISL2017 #FCPuneCity #NortheastUnitedFC

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com