ஐஎஸ்எல் கால்பந்து - கேரளாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடம் பெற்றது கோவா

கோவாவில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடத்தை மீண்டும் பிடித்தது கோவா அணி.
இரு கோல் அடித்து கோவா அணியை வெற்றி பெறச் செய்த ஹியூகோ பவுமஸ்
இரு கோல் அடித்து கோவா அணியை வெற்றி பெறச் செய்த ஹியூகோ பவுமஸ்
Published on

கோவா:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கோவாவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் எப்சி கோவா மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே கோவா அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அந்த அணியின் ஹியூகோ பவுமஸ் 26 மற்றும் 83 வது நிமிடம் என இரண்டு கோல் அடித்து அசத்தினார். அவருக்கு ஜாக்கிசந்த் சிங் 46வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். கேரளா அணியினரும் 53, 69 நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தனர்.

இறுதியில், கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்து அசத்தியது.

இந்த வெற்றியின் மூலம் கோவா அணி 27 புள்ளிகள் பெற்று மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. கேரளா 14 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com