ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணியின் வெற்றி தொடருமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் 18-வது லீக்கில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Published on

சென்னை:

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு டெல்லியில் நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்தது. தனது முதல் 3 ஆட்டங்களில் கோல் இன்றி டிரா கண்டிருந்த ஜாம்ஷெட்பூர் அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக்கில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தனது முதல் ஆட்டத்தில் கோவாவிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி அதன் பிறகு கவுகாத்தி, புனே அணிகளுக்கு எதிராக கோல் எதுவும் வாங்காமல் வெற்றி வாகை சூடியது. அந்த வெற்றிப்பயணம் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி ஒரு முறையும், கொல்கத்தா அணி 4 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com