ஈராக்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீசார் 6 பேர் பலி

ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 6 பேர் உயிரிழந்தனர்.
ஐஎஸ் பயங்கரவாதிகள்
ஐஎஸ் பயங்கரவாதிகள்
Published on

பாக்தாத்:

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமெரிக்கா மற்றும் உள்நாட்டு அரசுப்படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

அவர்களில் சிலர் யூப்ரெட்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள பாலைவனப்பகுகளில் பதுங்கியுள்ளனர். அங்கிருந்தவாறு அவ்வப்போது கொரில்லா போர்முறை பாணியில் அதிரடியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

இவர்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு போலீசாரும், ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசுப்படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் பாக்தாத் நகரில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள சலாஹூதின் மாகாணம் தல் அல்-ஹாஷப் என்ற கிராமத்தில் போலீஸ் சோதனைச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. 

அந்த சோதனைச்சாவடியை குறிவைத்து இன்று ஐ.எஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 6 போலீசார் உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com