

டமாஸ்க்ஸ்:
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
நேற்று நடைபெற்ற சண்டையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சில பகுதிகளை கூட்டுப்படையினரிடம் இருந்து கைப்பற்றினர்.
இந்நிலையில், ராகா மாகாணத்திற்கு கிழக்கு பகுதியில் கூட்டுப்படையினர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 34 ராணுவவீரர்கள் பலியாகி உள்ளனர் என அங்குள்ள மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.