குர்திஸ்தான் தனிநாடு வாக்கெடுப்பு: அதிக வாக்குப்பதிவு - வெற்றி நிச்சயம் என உற்சாகம்

குர்திஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கான பொதுவாக்கெடுப்பில் அதிமானோர் வாக்களித்துள்ளனர். எனினும், இந்த வாக்கெடுப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என ஈராக் தெரிவித்துள்ளது.
குர்திஸ்தான் தனிநாடு வாக்கெடுப்பு: அதிக வாக்குப்பதிவு - வெற்றி நிச்சயம் என உற்சாகம்
Published on

பாக்தாத்:

ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். குர்திஸ்தான் என்றழைக்கப்படும் இந்தப் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க குர்துகள் வசிக்கும் இந்த பகுதியை தனிநாடாக அறிவிக்க அம்மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இக்குழுக்கள்ளில் பிகேகே எனப்படும் குர்துக்கள் தொழிலாளர் கட்சியினர் ஆயுதமேந்திய போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால், குர்து இன மக்களின் இந்த கோரிக்கையை ஈராக் ஏற்க மறுத்து விட்டது. ஈராக் துண்டாக பிரிவதை அனுமதிக்க மாட்டேன் என ஈராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி தெரிவித்திருந்தார்.

தனி நாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடத்த குர்து மக்கள் முடிவெடுத்துள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை ஆதரிப்பதாக இஸ்ரேல் கூறியது. இதற்கான தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தனிநாடு கோரிக்கைக்கான ஆதரவு பெருகி வருகிறது.

பரபரப்பான சூழ்நிலையில் நேற்று பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பும் பலப்படுத்தப்படிருந்தது.

இர்பில் மற்றும் கிர்கக் நகரில் அதிகமான மக்கள் திரளாக வந்து வாக்களித்தனர். மேலும், வெற்றி நிச்சயமாக கிடைக்கும் என உற்சாகமாக பேட்டியளித்தனர். எனினும், இந்த வாக்கெடுப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என ஈராக பிரதமர் தெரிவித்துள்ளார். பொதுவாக்களிப்பு முடிவடைந்ததும் 72% அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவிலும் கனிசமான அளவில் குர்து இனத்தவர்கள் வசித்து வருவதால், ஈராக் குர்துக்களின் தனிநாடு கோரிக்கை நிறைவேறினால் அது சிரியா மற்றும் துருக்கி நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என துருக்கி அச்சம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com