ஈராக் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஈராக் நாட்டின் அன்பார் மாகாணத்தில் கூட்டுப்படைகள் இன்று நடத்திய தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர்.
தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள்
தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள்
Published on

பாக்தாத்:

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

அவர்களில் சிலர் யூப்ரெட்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள புறநகர் பகுதிகளில் பதுங்கியுள்ளனர். அங்கிருந்தவாறு அவ்வப்போது கொரில்லா போர்முறை பாணியில் அதிரடியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

இவர்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஈராக் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினருக்கு உதவியாக பொதுமக்களும் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். 

இந்நிலையில், ஈராக் நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அன்பார் மாகாணத்துக்கு உட்பட்ட பாலைவனம் பகுதியில் உள்ள ஐ.எஸ்.இயக்கத்தை சேர்ந்த சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஈராக் உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியை குறிவைத்து நேற்று கூட்டுப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com