சிரியாவுக்குள் புகுந்து ஈராக் போர் விமானங்கள் தாக்குதல் - 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

சிரியாவுக்குள் முகாமிட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தின்போது ஈராக் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். #Iraqbombing #IslamicStatemeeting #45killedinSyria
சிரியாவுக்குள் புகுந்து ஈராக் போர் விமானங்கள் தாக்குதல் - 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
Published on

பாக்தாத்:

ஈராக் நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஈராக் ராணுவம் முற்றிலுமாக ஒடுக்கி நாட்டை விட்டு விரட்டி அடித்துள்ளது. ஆனால், அங்கிருந்து அண்டை நாடான சிரியாவின் எல்லைப்பகுதிக்கு தப்பிச்சென்ற பயங்கரவாதிகள் அவ்வப்போது ஈராக் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

சிரியாவில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் அமெரிக்க விமானப்படையுடன் அண்டை நாடான ஈராக்கின் விமானப்படைகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சிரியாவின் ஹாஜின் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆலோசனை கூட்டம் நடத்திய மூன்று வீடுகளின்மீது ஈராக் நாட்டு போர் விமானங்கள் நேற்றிரவு ஆவேச தாக்குதல்களை நடத்தின.

இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் போர்துறை மந்திரி, ஊடகத்துறை தலைமை பொறுப்பாளர் உள்பட 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஈராக் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. #Iraqbombing #IslamicStatemeeting #45killedinSyria

X

Maalai Malar
www.maalaimalar.com