ஈராக் - ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். #Iraq #ISmilitantskilled
ஈராக் - ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
Published on

பாக்தாத்:

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மொசூல் நகரில் உள்ள குகைகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Iraq #ISmilitantskilled

X

Maalai Malar
www.maalaimalar.com