இரணியல் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்- டிரைவர் கைது

இரணியல் அருகே மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
லாரி பறிமுதல்
லாரி பறிமுதல்
Published on

இரணியல்:

இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜேயின் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நெய்யூர் பகுதியில் வரும் போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதில் எந்தவித அனுமதியும் இன்றி அருப்புக்கோட்டையில் இருந்து மணல் கடத்தி வருவது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டதில் லாரியை ஓட்டி வந்தது ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(வயது40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டிரைவர் சசிக்குமாரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com