ஏவுகணை வாங்க முயற்சித்த வழக்கில் அமெரிக்க ஈரானியருக்கு 25 ஆண்டு சிறை

ஏவுகணை வாங்க முயற்சித்த வழக்கில் அமெரிக்காவிலும், ஈரானிலும் இரட்டை குடியுரிமை பெற்றவருக்கு 25 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
ஏவுகணை வாங்க முயற்சித்த வழக்கில் அமெரிக்க ஈரானியருக்கு 25 ஆண்டு சிறை
Published on

நியூயார்க்:

அமெரிக்காவிலும், ஈரானிலும் இரட்டை குடியுரிமை பெற்றவர், ரேஸா ஒலாங்கியான் (வயது 57). இவர் ஈரானில் பிறந்து, 1979-ம் ஆண்டு படிப்புக்காக அமெரிக்கா சென்றவர். 1999-ம் ஆண்டு, அந்த நாட்டின் குடியுரிமையை பெற்றார். பின்னர் 2004-ம் ஆண்டு மீண்டும் ஈரானுக்கு சென்றார்.

இவர் ரஷிய ஆயுத தரகர் போன்று நடித்து, தரையில் இருந்து புறப்பட்டு சென்று வானில் தாக்குதல் நடத்தும் ஆற்றல் வாய்ந்த ஏவுகணைகளை ஈரானுக்கு வாங்க முயற்சித்து உள்ளார்.

இது தொடர்பாக இவர் 2012-ம் ஆண்டு உக்ரைனில் அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவரை சந்தித்து பேசி உள்ளார். இது அம்பலத்துக்கு வந்து விட்டது.

இதையடுத்து எஸ்டோனியாவில் 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் ரேஸா கைது செய்யப்பட்டார்.

அவர் மீது மேன்ஹாட்டன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி லோரட்டா பிரெஸ்கா முடிவுக்கு வந்து, அவருக்கு 25 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.  #tamilnews 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com