சிறைவிதிகளை மீறுவதாக சசிகலா மீது போலீஸ் அதிகாரி ரூபா மீண்டும் குற்றச்சாட்டு

அதிகாரிகள் துணையுடன் சசிகலா விதிமுறைகளை மீறி வருகிறார் என்று போலீஸ் அதிகாரி ரூபா குற்றம் சாட்டிள்ளார்.
சிறைவிதிகளை மீறுவதாக சசிகலா மீது போலீஸ் அதிகாரி ரூபா மீண்டும் குற்றச்சாட்டு
Published on

தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா‌ஷர்மா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது சசிகலா, இளவரசி ஆகியோர் கைதிகளுக்குரிய உடை அணியாமல் வண்ண உடையில் இருந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரேகா‌ஷர்மா இது குறித்து நிருபரிடம் கூறியதாவது:-

சிறையில் சசிகலா சீருடை அணிவதில்லை. வண்ண உடைகளிலேயே இருக்கிறார். இது குறித்து சிறை அதிகாரிகளிடம் நான் விளக்கம் கேட்டேன். அப்போது அதிகாரிகள் சசிகலா மற்றும் இளவரசிக்கு சிறையில் வி.ஐ.பி. வகுப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனவே அவர்கள் வெள்ளை சீருடை அணிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தங்களுடைய சொந்த ஆடைகளை அணிந்து கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தனை பிரச்சினைகளுக்கு பிறகும் சசிகலா வி.ஐ.பி. வகுப்பு சலுகை அனுபவித்து வருவது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு ரேகா‌ஷர்மா கூறினார்.

சசிகலா வண்ண உடை அணிவது குறித்து சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி.யும், தற்போது ஊர்காவல் படையில் ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவருமான ரூபாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சிறை விதிமுறைகளின்படி சிறையில் உள்ள அனைத்து தண்டனை கைதிகளும் வெள்ளை சீருடை அணிய வேண்டும். ஆனால் சசிகலா போன்ற கைதிகள் அதிகாரிகளின் துணையுடன் விதிமுறைகளை மீறி வருகின்றனர்.

இவ்வாறு ரூபா கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com