ஐ.பி.எல்., டி20 உலகக்கோப்பை அனுபவம் எங்களுக்கு சாதகமாக இருக்கும்: பால்க்னெர்

ஐ.பி.எல். டி20 லீக் மற்றும் கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடர் அனுபவம் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என பால்க்னெர் கூறியுள்ளார்.
ஐ.பி.எல்., டி20 உலகக்கோப்பை அனுபவம் எங்களுக்கு சாதகமாக இருக்கும்: பால்க்னெர்
Published on

இரண்டு அணிகளும் வலுவானது என்பதால் யார் தொடரை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல். மற்றும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அனுபவம் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருக்கும் என ஜேம்ஸ் பால்க்னெர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜேம்ஸ் பால்க்னெர் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் ஐ.பி.எல். டி20 லீக் மற்றும் டி20 உலகக்கோப்பையில் விளையாடியவர்கள். இந்த அனுபவம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்திய அணி சமீப காலமாக ஏராளமான ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. தற்போது அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். இந்தியாவை வெற்றிக் கொள்வதற்கான சோதனையாக இருக்கும்’’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com