புனேவுக்கு 130 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

ஐதராபாத் நகரில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் புனே அணிக்கு 130 ரன்களை இலக்காக மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்துள்ளது.
புனேவுக்கு 130 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்
Published on

ஐ.பி.எல. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி ஐதராபாத் நகரில் நடைபெற்று வருகின்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 10 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. சிம்மன்ஸ்(3), பார்த்திவ் பட்டேல்(4) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் ராயுடு 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மாவும் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. வந்த வேகத்தில் சிக்ஸர் விளாசிய பொல்லார்டும் 7 ரன்களில் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா(10), கேவி.சர்மா(1)ரன்களில் ஆட்டமிழக்க 79 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது மும்பை இந்தியன்ஸ். இதனால் 100 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. இறுதியில் குணால் பாண்டியா இறுதி வரை நின்று விளையாடி 47 ரன்கள் குவித்து ஆட்டத்தில் இறுதி பந்தில் ஆட்டமிழந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com