திருப்பதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

திருப்பதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருப்பதி:

திருப்பதியில் கிரிக்கெட் சூதாட்டம் உள்பட பல்வேறு சூதாட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பதி ஸ்ரீதேவி காம்ப்ளக்ஸ் அருகே உள்ள தொட்டபுரம் தொகுதியில் சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக திருப்பதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவபிரசாத் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்த சிலர் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடினர்.

போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது36), பிரசாத்(40), புருஷோத்தம் (35), குணா(38) மற்றும் மதுசூதனன் (29) என்பது தெரியவந்தது. அவர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.16,500 மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com