சென்னையில் ஐ.பி.எல். திட்டமிட்டப்படி நடக்கும்- ஐ.பி.எல். சேர்மன் அறிவிப்பு

ஐ.பி.எல். போட்டியை அரசியலாக்க வேண்டாம் எனவும் சென்னையில் திட்டமிட்டப்படி போட்டி நடைபெறும் எனவும் ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ்சுக்லா கூறியுள்ளார்.
சென்னையில் ஐ.பி.எல். திட்டமிட்டப்படி நடக்கும்- ஐ.பி.எல். சேர்மன் அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் முதல் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். போட்டியை நடத்த பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆனாலும் பலத்த பாதுகாப்புடன் ஐ.பி.எல். போட்டி சென்னையில் நடைபெறும், வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படாது என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில் சென்னையில் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ்சுக்லா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

ஐ.பி.எல். போட்டிகள் சென்னையில் திட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறும். அதில் மாற்றம் இல்லை. ஐ.பி.எல். போட்டியை அரசியலாக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com