ஐபிஎல் சூதாட்டம் - 12 பேர் கைது - ரூ.15.5 லட்சம் பறிமுதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் எந்த அணி வெல்லும்? என்ற சூதாட்டத்துக்கு தரகுவேலை பார்த்த 12 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். #IPLbetting #arrested
ஐபிஎல் சூதாட்டம் - 12 பேர் கைது - ரூ.15.5 லட்சம் பறிமுதல்
Published on

ஐதராபாத்:

நாட்டின் பல பகுதிகளிலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணி எது? என நாட்டின் பல பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் வைத்து கிரிக்கெட் சூதாட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஐதராபாத் பகுதியில் இன்று காவல்துறையினரின் அதிரடி சோதனையில், சூதாட்டத்துக்கு தரகுவேலை பார்த்த 12 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும், 22 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.      #IPLbetting #arrested

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com