அந்த்ரே ரஸல் சுழற்பந்தை எதிர்கொள்ளக் கூடாது என்பதே திட்டம்: டெல்லி வீரர் லலித் யாதவ்

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த்ரே ரஸல் 27 பந்தில் 45 ரன்கள் விளாசிய போதிலும், கொல்கத்தா அணியால் வெற்றி பெற முடியவில்லை.
லலித் யாதவ், அந்த்ரே ரஸல்
லலித் யாதவ், அந்த்ரே ரஸல்
Published on

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியால் 154 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. மோர்கன், தினேஷ் கார்த்திக் ஆகியோரை டெல்லி இளம் வீரர் லலித் யாதவ் வீழ்த்தினார். அந்த்ரே ரஸல் 27 பந்தில் 45 ரன்கள் அடித்தார்.

சிறப்பாக பந்து வீசிய லலி் யாதவ் 3 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியின்போது அந்த்ரே ரஸல் சுழற்பந்தை எதிர்கொள்ள விடக்கூடாது என்பதே எங்களது திட்டமாக இருந்தது என லலித் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லலித் யாதவ் கூறுகையில் ‘‘அந்த்ரே ரஸலுக்கு அதிக அளவில் சுழற்பந்து வீசக்கூடாது என்பதே எங்களது திட்டமாக இருந்தது. இஷாந்த் சர்மா ரபடா, அவேஷ் கான் ஆகியோர் மூலம் யார்க்கர் மற்றும் பவுன்சர் வீசி நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என திட்டமிட்டோம்’’ என்றார்.

என்றாலும் அந்த்ரே ரஸல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் டெல்லி அணி 16.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com