வங்காள தேசத்தில் ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில் தகராறு: வாலிபரை அடித்துக் கொன்ற நண்பர்கள்

வங்காள தேசத்தில் ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை, அவருடைய நண்பர்கள் அடித்துக்கொன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளியது.
வங்காள தேசத்தில் ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில் தகராறு: வாலிபரை அடித்துக் கொன்ற நண்பர்கள்
Published on

உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக் தொடரான ஐ.பி.எல். தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரை இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல, உலகளவில் உள்ள ரசிகர்களும் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

ஒருபக்கம் போட்டி பரபரப்பாக செல்லும்போது, மறுபக்கம் சூதாட்டமும் நடைபெற்று வருகிறது. வங்காள தேசத்தில் ஐ.பி.எல். போட்டியை பார்த்து வரும் ரசிகர்களில் சிலர் சூதாட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு சூதாட்டத்திற்கு தடையிருந்த போதிலும், கிராமப் பகுதியில் ஆங்காங்கே நடைபெற்றுதான் வருகிறது.

மே 2-ந்தேதி நடைபெற்ற போட்டியின்போது சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சந்தோஷ் என்பவர் சக நண்பர்களுடன் சூதாட்ட விளையாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் ‘50 டாகா’ வென்றுள்ளார். ஆனால் நண்பர்கள் அவருக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது சந்தோஷின் நண்பர்கள், அவரின் விதைப்பை நோக்கி வேகமாக மிதித்துள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டு ‘59 டாகா’விற்காக வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com