சென்னை, ஈரோடு டிரெக்கிங் கிளப் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்படும்- அதுல்ய மிஸ்ரா பேட்டி

குரங்கணி காட்டுத்தீ தொடர்பாக சென்னை மற்றும் ஈரோடு டிரெக்கிங் கிளப் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்படும் என அதுல்ய மிஸ்ரா கூறியுள்ளார்.
சென்னை, ஈரோடு டிரெக்கிங் கிளப் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்படும்- அதுல்ய மிஸ்ரா பேட்டி
Published on

சென்னை:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது குரங்கணி வனப்பகுதி. இந்த மலைப்பகுதியில் கடந்த 11-ம் தேதி திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதில், சென்னையில் இருந்து சுற்றுலா சென்ற 20 பேர் காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, குரங்கணி காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமனம் செய்தது.

இந்நிலையில், காட்டுத்தீ தொடர்பாக போடியில் உள்ள பொதுமக்கள் 32 பேரிடமும், அரசு அதிகாரிகள் 41 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் ஈரோடு டிரெக்கிங் கிளப் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்படும் என அதுல்ய மிஸ்ரா இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதுல்ய மிஸ்ரா இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அவர் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  #TheniForestFire #TheniFire #Theni

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com