கிருமாம்பாக்கம் அருகே இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கிருமாம்பாக்கம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருமாம்பாக்கம் அருகே இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Published on

புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் அருகே பனித்திட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). இவர், புதுவை காவல்துறையில் சிறப்பு புலனாய்வு பிரிவில் சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். சமீபத்தில் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று சிக்மா பிரிவில் பணியாற்றி வந்தார். 

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்து வந்தார். 

நேற்று முன்தினம் சுப்பிரமணியன் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்து போனார். 

இறந்து போன இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனுக்கு வாசுகி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com