ஜெயலலிதா செயலாளர்களுக்கு விசாரணை கமி‌ஷன் சம்மன்: சசிகலா உதவியாளரும் ஆஜராக உத்தரவு

ஜெயலலிதாவின் முன்னாள் 4 செயலாளர்கள், கார் ஓட்டுநர் மற்றும் சசிகலா உதவியாளர் ஆகியோர் நேரில் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #Jayalalithaa #Jayalalithaadeath
ஜெயலலிதா செயலாளர்களுக்கு விசாரணை கமி‌ஷன் சம்மன்: சசிகலா உதவியாளரும் ஆஜராக உத்தரவு
Published on

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை கண்காணித்து உரிய ஆலோசனைகளை வழங்க, டாக்டர் பாலாஜி உள்ளிட்ட அரசு டாக்டர்கள் குழு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

கடந்த மாதம் 7-ந்தேதி அரசு டாக்டர் பாலாஜி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார். ஜெயலலிதா கைரேகை பெறப்பட்ட விவகாரம் குறித்தும் டாக்டர் பாலாஜி விரிவாக கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது என்ன? என்பது குறித்த விவரத்தையும் எழுத்துபூர்வமாக அரசு மருத்துவர் பாலாஜி இன்று தாக்கல் செய்தார்.

அரசு மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்தபோது எடுத்த படம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சில மருத்துவ குறிப்புகள் பற்றி நீதிபதி ஆறுமுகசாமி கேட்டுக்கொண்டதின் பேரில் நான் மருத்துவ குறிப்புகளை கொடுத்தேன். அதற்காக சில கேள்விகளை கேட்டதற்கு நான் பதில் கூறினேன். எழுத்து பூர்வமாக தாக்கல் செய்தேன்.

தேவைப்பட்டால் அடுத்த மாதம் மீண்டும் ஆஜராவேன். தற்போது எனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துள்ளேன்.

அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் தாக்கல் செய்துள்ள விவரங்கள் குறித்து அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது சசிகலா விளக்கம் அளிப்பது தொடர்பாக 15 நாள் அவகாசம் கேட்கப்பட்டது. இதுகுறித்து ஆணையம் 30-ந்தேதி தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கும் என தெரிகிறது.

இதற்கிடையே ஜெயலலிதாவின் செயலாளர்களாக பணியாற்றிய வெங்கட்ரமணன், விஜயகுமார், ராமலிங்கம், ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகிய 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு விசாரணை கமி‌ஷன் சம்மன் அனுப்பி உள்ளது.

வெங்கட்ரமணன் வருகிற 30-ந்தேதியும், விஜயகுமார் 31-ந்தேதியும், ராமலிங்கம் பிப்ரவரி 1-ந்தேதி, ஜெயஸ்ரீ முரளிதரன் 2-ந்தேதியும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்களில் வெங்கடரமணன் ஓய்வு பெற்று விட்டார். மற்ற 3 பேரும் தற்போது அரசு பணியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com