பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கொலை குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கொலை குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கொலை குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை
Published on

பெங்களூரு:

கர்நாடகா மாநிலம் சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த மஸ்தி குமார்( 31) என்பவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கொலை குற்றவாளியான இவர் 10 மாதங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், மஸ்தி குமார் இன்று சிறையில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தனது உடைகளை பயன்படுத்தி தூக்கிட்டு கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com