சென்னையை சேர்ந்த அனுவித்யா போடி அரசு மருத்துவமனையில் அனுமதி

குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி படுகாயத்துடன் மீட்கப்பட்ட சென்னையை சேர்ந்த அனுவித்யா என்ற பெண் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #TheniForestFire #குரங்கணிதீ #TheniFire
சென்னையை சேர்ந்த அனுவித்யா போடி அரசு மருத்துவமனையில் அனுமதி
Published on

தேனி:

குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி படுகாயத்துடன் மீட்கப்பட்ட சென்னையை சேர்ந்த அனுவித்யா என்ற பெண் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 39 பேர் சிக்கிக்கொண்டனர். இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மலைப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க வனத்துறையினருடன் போலீசாரும், ராணுவத்தினரும் சேர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி படுகாயம் அடைந்த அனுவித்யா என்ற பெண் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இவர் சென்னை தாம்பரம் ராஜகீழ்பாக்கத்தை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அனுவித்யாவை தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  #TheniForestFire #குரங்கணிதீ #TheniFire #tamilnews 

X

Maalai Malar
www.maalaimalar.com