புதுவை அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 15 பெண்கள் காயம்

புதுவை அருகே இன்று காலை சாலையோர பள்ளத்தில் வேன் கவிழந்ததில் 15 பெண்கள் காயம் அடைந்தனர்.
புதுவை அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 15 பெண்கள் காயம்
Published on

சேதராப்பட்டு:

புதுவை ஆலங்குப்பத்தில் பீங்கான் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் மரக்காணம் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் தினமும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வேனில் வேலைக்கு சென்று வந்தனர்.

வழக்கம் போல் இன்று காலை அப்பகுதி பெண்கள் வேலைக்கு வேனில் புறப்பட்டு வந்தனர். புதுவை காலாப்பட்டை அருகே கீழ்புத்துப்பட்டை அடுத்த கீழ்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த ஒரு கார் வேனை முந்தி செல்ல முயன்றது.

இதனால் கார் மீது மோதாமல் இருக்க வேனை டிரைவர் இடதுபுறமாக திருப்பினார். அப்போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி 3 முறை பல்டியடித்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் வேன்அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் வேனில் பயணம் செய்த மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மனைவி கலா (வயது 40, இவர்களது மகள் ரவீந்திரா (20), உதய குமார் மனைவி அழகு முத்து (42) மற்றும் செல்வி உள்பட 15 பெண்கள் காயம் அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் ஏட்டு ராஜேந்திரன் மற்றும் போலீஸ்காரர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு தங்களது ரோந்து வாகனத்திலேயே கொண்டு சென்று பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com