காஷ்மீரில் எல்லைக்கோடு வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை

பாகிஸ்தான் பகுதியில் இருந்து காஷ்மீரின் குரெஸ் செக்டார் எல்லை வழியாக இன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீரில் எல்லைக்கோடு வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

பாகிஸ்தான் பகுதியில் இருந்து காஷ்மீரின் குரெஸ் செக்டார் எல்லை வழியாக இன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு காஷ்மிர் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள பந்திப்போரா மாவட்டம் குரெஸ் செக்டார் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் வழக்கம்போல காவல் மற்றும் கண்கானிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இன்று அதிகாலை இருளை சாதகமாக்கிக்கொண்டு சிலர் பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்ததை கவனித்து விட்ட பாதுகாப்பு படையினர், அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முன்நோக்கி நகர்ந்து வந்தனர்.

இதை கண்ட பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாகிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, பாகிஸ்தான் தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையே சில நிமிடங்கள் நடந்த இந்த சண்டையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குள் தப்பியோடி ஒளிந்து கொண்டனர்.

ஜம்மு காஷ்மீர் பகுதியிலுள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய அதிரடி தாக்குதல் 

சம்பவங்களில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 14 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 24 ஊடுருவல் முயற்சியை முறியடித்து, ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த 41 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்கும் துப்பாகிச்சண்டையில் இந்திய வீரர் ஒருவரும் பலியாகியுள்ளது 

குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com