இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவம் அதிரடி

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லைக்குள் இன்று காலை அத்துமீறி நுழைய முயன்ற 4 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும், அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவம் அதிரடி
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமானது பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து இரு தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தினர்.

இப்படியாக எல்லையில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலையில், இன்று காலை ராம்பூர் செக்டார் அருகே ரகசியமாக தீவிரவாதிகள் எல்லையை ஊடுருவ முயற்சி செய்தனர். இதனை, கவனித்து விட்ட பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மீது சரமாரியான தாக்குதல்களை நிகழ்த்தினர்.

இரு தரப்பினருக்கும் நடந்த இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அப்பகுதியில் வேறு தீவிரவாதிகள்

பதுங்கியுள்ளனரா? என்றும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால், எல்லைப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com