ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு

ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம் அடிக்க வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்
Published on

கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லோகேஷ் ராகுல் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 4 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

இதனால் இந்தியா 7 ஓவரில் 25 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கையுடன் பந்தை எதிர்கொண்டார். அதேவேளையில் ரோகித் சர்மாவால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இருவரும் நிதானமாக விளையாட இந்தியாவின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. ஆனால் 19-வது ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 36 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 56 பந்தில் 6 பவுண்டரியுடன் அந்த ரன்னை எடுத்தார்.

அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர்.

அரைசதம் அடித்த பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் எளிதாக 300 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.

கேதர் ஜாதவ் 35 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஷிவம் டுபே அதிரடி ஆட முயன்றார். அவர் 9 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com