

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மெதுவாக பந்து வீசியதன் காரணமாக இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் தரங்காவிற்குப் பதிலாக கபுகேதரா இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
சரியான 2.00 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. மூன்று டெஸ்ட் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு இலங்கை அணி முதன்முறையாக டாஸ் வென்றுள்ளது.
இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் தரங்காவிற்குப் பதிலாக திரிமன்னே சேர்க்கப்பட்டுள்ளார். குணதிலகாவிற்குப் பதிலாக சண்டிமல் அணியில் இடம்பிடித்துள்ளார்.