

பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 162 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்தியாவும் பாலோ-ஆன் கொடுக்க தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.
முகமது ஷமியின் அபார பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. ஹம்சா (0), டு பிளிசிஸ் (4), பவுமா (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் உமேஷ் யாதவ் டி காக் (5), கிளாசனை (5) வெளியேற்ற தென்ஆப்பிரிக்கா 36 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
இதனால் 3-வது நாள் ஆட்டத்திற்குள் தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆகி டெஸ்ட் போட்டி முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. லிண்டே 27 ரன்களும், டேன் பீட் 23 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 3-வது நாளிலேயே ஆல்அவுட் ஆகாமல் தப்பித்துக் கொண்டது.