

இதனால் இருநாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தீவிர முயற்சியால் இரு நாடுகளுக்கு இடையிலான பொதுவான இடத்தில் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில்தான் பதான்கோட் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பின் பாகிஸ்தான் உடனான தொடருக்கான இந்தியா விருப்பம் காட்டவில்லை.
சில தினங்களுக்கு முன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரியான சுஷ்மா சுவராஜ், தீவரவாத தாக்குதலை நிறுத்தும்வரை பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் - இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடரை மறந்து விடுங்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மியான்தத் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மியான்தத் கூறுகையில் ‘‘இந்தியா நம்முடன் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை. அப்படியோ விட்டுவிடுங்கள். இந்தியாவுடன் விளையாடாவிட்டால், நம்முடைய கிரிக்கெட் ஒன்னும் செத்துவிடாது. இந்தியா உடனான கிரிக்கெட்டை மறந்து, முன்னேற்றத்தை நோக்கி செல்ல வேண்டும்.