ஜோ ரூட்- பேர்ஸ்டோவ் ஜோடி அபாரம்: உணவு இடைவேளை வரை விக்கெட் வீழ்த்த முடியாமல் இந்தியா திணறல்

ஜோ ரூட் சதத்தை நெருங்கும் நிலையில், பேர்ஸ்டோவ் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஜோ ரூட், பேர்ஸ்டோவ்
ஜோ ரூட், பேர்ஸ்டோவ்
Published on

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 364 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது.

நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 48 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜோ ரூட் அரைசதம் அடித்தார். இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று இன்னிங்சிலும 50 ரன்களுக்கு மேல் அடித்து முத்திரை படைத்தார். மறுமுனையில் பேர்ஸ்டோவும் நிலைத்து நின்று விளையாடினார்.

இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை ஜோ ரூட்- பேர்ஸ்டோவ் ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் பேர்ஸ்டோவ் அரைசதம் அடித்தார்.

இங்கிலாந்து 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் அடித்துள்ளது. ஜோ ரூட் 89 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com