

ஜகார்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற ஜாம்பவான்களை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பான வீரர் கசுமாசா சகாய்-ஐ எதிர்கொண்டார். தன்னைவிட 20 ரேங்க் பின்தங்கிய ஜப்பான் வீரரை பிரனாய் எளிதில் வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கபட்டது.
முதல் நிலை வீரரை வீழ்த்தி பிரனாய்க்கு சகாய் கடும் நெருக்கடி கொடுத்தார். முதல் செட் பிரனாய் 21-17 எனக் கைப்பற்றினார். ஆனல், 2-வது செட்டில் ஜப்பான் வீரர் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் ஆட்டம் நீடித்துக் கொண்டே இருந்தது. இறுதியில் பிரனாய் 26-28 என 2-வது செட்டை இழந்தார்.
இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் பிரனாய் கவனமாக விளையாடினார். இருந்தாலும் அந்த செட்டையும் 18-21 என இழக்க நேரிட்டது. இதனால் அரையிறுதியோடு தொடரில் இருந்து வெளியேறினார் பிரனாய். காலிறுதியில் உலகின் நம்பர் ஒன் வீரரை வீழ்த்திய பிரனாய்க்கு இந்த தோல்வி பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் வரை நீடித்தது.