உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தில் இருந்து ஏவுகணை செலுத்தி சோதனை

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தில் இருந்து வானில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தில் இருந்து ஏவுகணை செலுத்தி சோதனை
Published on

புதுடெல்லி:

இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு கழகம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம் தொடர்ந்து பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக வானில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை தேஜாஸ் போர் விமானத்தில் இருந்து செலுத்தி சோதிக்கப்பட்டது.

கோவா கடற்பகுதியில் நேற்று முன்தினம் நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனை நிகழ்வுகள் அனைத்தையும் அதிநவீன கேமராவுடன் வேறு 2 தேஜாஸ் போர் விமானத்தில் சென்று ராணுவ அதிகாரிகள் கண்காணித்தனர். இதில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தேஜாஸ் போர் விமானம் நிறைவேற்றி இருந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றதற்காக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.

இந்த சோதனை வெற்றியடைந்ததன் மூலம் தேஜாஸ் போர் விமானத்துக்கான இறுதி ஒப்புதல் கிடைப்பது மேலும் வேகமெடுக்கும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானத்தில் ஏவுகணைகள் உள்ளிட்ட போர் தளவாடங்களை இணைப்பதற்கு ஏற்கனவே ஒப்புதல் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com