கத்தாரில் வசிக்கும் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: வெளியுறவு இணையமைச்சர் தகவல்

அரபு நாடுகளால் தூதரக ரீதியிலாக தடை விதிக்கப்பட்டுள்ள கத்தார் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய வெளியுறவு மந்திரி வி.கே.சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் வசிக்கும் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: வெளியுறவு இணையமைச்சர் தகவல்
Published on

புதுடெல்லி:

அரபு நாடுகளால் தூதரக ரீதியிலாக தடை விதிக்கப்பட்டுள்ள கத்தார் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய வெளியுறவு மந்திரி வி.கே.சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு உதவுவதாக கூறி கத்தார் உடனான தூதரக உறவுகளை சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட 6 அரபு நாடுகள் முறித்தன. இதனால், வளைகுடா நாடுகளில் இன்னும் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகின்றது. கத்தாரில் மட்டும் சுமார் 8 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.

கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு பணிபுரிந்து வரும் சூழ்நிலையில் கத்தார் மீதான தடை அவர்களையும் பாதிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு இணையமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில், “கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் முழு பாதுகாப்போடு தான் உள்ளனர். இந்திய தொழிலாளர்களுக்கு அரபு நாடுகளின் தடையால் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே, அவர்களை இங்கு அழைத்து வரும் திட்டம் எதும் அரசுக்கு இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com