அமெரிக்கா: இந்திய வம்சாவளி டாக்டரை குத்திக் கொன்ற மனநோயாளி

அமெரிக்கா: இந்திய வம்சாவளி டாக்டரை குத்திக் கொன்ற மனநோயாளி

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டரை அவரிடம் சிகிச்சை பெற்றுவந்த மனநோயாளி கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

வாஷிங்டன்:

தெலுங்கானா மாநிலம் நல் கொண்டாவில் உள்ள மிர்யாலாகுடா பகுதியை சேர்ந்தவர் அச்சுத ரெட்டி (57) மனநோய் மருத்துவரான இவர் அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் உள்ள விச்சிதா நகரில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார்.

அவரது கிளினிக்கில் இந்திய வம்சாவளியச் சேர்ந்த உமர் ராஷித் தத் என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாலை டாக்டர் அச்சுத ரெட்டிக்கும் உமருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு மேனேஜர் சென்று பார்த்த போது உமர் டாக்டரை தாக்க முயன்றார்.  உமரிடமிருந்து தப்பித்த டாக்டர் கிளினிக்கை விட்டு வெளியே ஓடினார்.

அவரை விரட்டிச் சென்ற உமர்  டாக்டர் அச்சுத ரெட்டியின் உடலில் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த டாக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அருகில் உள்ள கிளப் பார்க்கிங்கில் ரத்த கறையுடன் காரில் இருந்த உமரை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் உமர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com