சார்ஜா நகரில் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த இந்தியப் பெண் மரணம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா நகரில் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த இந்தியப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். #indianwomandeath #Sharjahbuilding
சார்ஜா நகரில் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த இந்தியப் பெண் மரணம்
Published on

துபாய்:

அல் காசிமியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வாசலில் ஒரு நடுத்தர வயது பெண் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதாக சார்ஜா நகர அவசர காவல் உதவி மையத்துக்கு நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் ஒரு அவசர அழைப்பு வந்தது. 

ஆம்புலன்ஸ் வாகனத்துடன் விரைந்துவந்த மீட்புக் குழுவினர் இறந்துகிடந்த அந்தப் பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவை சேர்ந்த சுமார் 41 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து விழுந்து, தலைக்காயத்தால் இறந்துப்போனதாக சார்ஜா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #tamilnews #indianwomandeath #Sharjahbuilding

X

Maalai Malar
www.maalaimalar.com