

ரியாத்:
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அடூர் பகுதியை சேர்ந்தவர் சூசி ஜெஃப்பி(36), தனது குடும்பத்தாருடன் சவுதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத் நகரில் வசித்து வந்தார்.
கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி மிகவும் கொடிய விஷத்தன்மை வாய்ந்த ஒருவகை எறும்பு கடித்ததால் ரத்தத்தில் பரவி இருந்த நச்சுத்தன்மை முறிவு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சூசி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #tamilnews #Indianwomandies #antbite