அபுதாபி லாட்டரியில் இந்தியருக்கு ரூ.17.5 கோடி ஜாக்பாட் பரிசு

அபுதாபி நாட்டில் வாழும் கேரள மாநிலத்தவருக்கு சமீபத்தில் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் 17.5 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.#indianwins #jackpot
நண்பர் டிப்பின்தாஸ் (இடது) உடன் சுனில் மப்பட்டா கிருஷ்ணன் குட்டி நாயர்(வலது)
நண்பர் டிப்பின்தாஸ் (இடது) உடன் சுனில் மப்பட்டா கிருஷ்ணன் குட்டி நாயர்(வலது)
Published on

துபாய்:

கேரள மாநிலத்தை சேர்ந்த சுனில் மப்பட்டா கிருஷ்ணன் குட்டி நாயர் சில ஆண்டுகளாக அபுதாபி நாட்டில் பணியாற்றியபடி அங்கேயே வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், அங்குள்ள தனது நண்பர்கள் மூன்று பேருடன் கூட்டாக சேர்ந்து 500 திர்ஹம் கொடுத்து அதிர்ஷ்ட பரிசுச் சீட்டு ஒன்றை சுனில்வா ங்கியிருந்தார். சமீபத்தில் நடந்த குலுக்கலில் சுனில் வாங்கிய பரிசுச் சீட்டுக்கு ஒரு கோடி திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 17 கோடியே 68 லட்சம் ரூபாய்) ஜாக்பாட் பரிசாக கிடைத்துள்ளது.

இந்த தொகையை தன்னுடன் சேர்ந்து பரிசுச் சீட்டு வாங்கிய நண்பர்கள் மூவருடன் பகிர்ந்துகொள்ளப் போவதாக சுனில் மப்பட்டா கிருஷ்ணன் குட்டி நாயர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ‘பிக் டிக்கெட் குலுக்கல்’ லாட்டரியில் அஜ்மன் நகரில் வசிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் நாயர் என்பவர் 1 கோடியே 20 லட்சம் திர்ஹம் பரிசு தொகையாக வென்றது நினைவிருக்கலாம். #tamilnews #indianwins #jackpot

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com