அமெரிக்கா: சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய சிறுமியின் வளர்ப்பு தாய் கைது

அமெரிக்காவின் டெக்சாஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய சிறுமி ஷெரின் மேத்யூஸின் வளர்ப்பு தாய் சினி மேத்யூசை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்கா: சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய சிறுமியின் வளர்ப்பு தாய் கைது
Published on

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ரிச்சர்ட்சன் நகரில் கேரள மாநிலத்தை சேர்ந்த வெஸ்லி மேத்யூஸ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.  இவரின் இரண்டாவது 3 வயது மகளான ஷெரின், மேத்யூஸ் அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுக்கப்பட்டவர் ஆவார். 

கடந்த மாதம் 6-ம் தேதி சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்ததால் அவளது வளர்ப்பு தந்தை வெஸ்லி அந்த சிறுமியை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வெளியே நடைபாதையில் விட்டு விட்டு சென்று விட்டார். அதன்பின்னர் அந்த சிறுமி காணாமல் போனாள்.

இதுகுறித்து அவர், ரிச்சர்ட்சன் நகர் போலீசில் புகார் செய்தார். சுற்று வட்டாரப்பகுதிகளில் அந்த சிறுமியை போலீசார் தேடினர். மேத்யூசுவின் வீட்டிற்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து 27-ம் தேதி ஒரு சிறுமியின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். இதுகுறித்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனை அந்த சடலம் காணாமல் போன இந்திய சிறுமியின் உடல் என போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து வெஸ்லி மேத்யூசை, ரிச்சர்ட்சன் போலீசார் கைது செய்தனர். 

அவரை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேத்யூ கூறிய வாக்குமூலத்தில், 'ஷெரினுக்கு இரவு பால் குடிக்கும் போது திடீரென அடைப்பு ஏற்பட்டது. அதனால் அவள் இறந்து விட்டாள். ஷெரின் உடலை நான் தான் வெளியே கொண்டு சென்று மறைத்து வைத்தேன்' என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், ஷெரினின் வளர்ப்பு தாய் சினி மேத்யூசையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை ஆபத்தான நிலையில் தனியாக விட்டுசென்றதாக அவர் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com