ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் உளவு விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிக்கானர் எல்லைப்பகுதியில் இன்று பாகிஸ்தான் நாட்டு உளவு விமானத்தை இந்தியப் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. #IndianAirDefence #Sukhoishootsdown #Pakistanidrone #Bikanersector
ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் உளவு விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது
Published on

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் துல்லியமாக நடத்திய தாக்குதலில் அங்கிருந்த பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதற்கு பதிலடியாக இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறிய போர் விமானத்தை நமது ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதைதொடர்ந்து இந்தியாவுக்கு சொந்தமான இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவித்தது.

மத்திய அரசின் முயற்சியால் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் சமீபத்தில் தாயகம் திரும்பினார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிக்கானர் எல்லைப்பகுதியில் இன்று காலை சுமார் 11.30 மணியளவில் பாகிஸ்தான் நாட்டு உளவு விமானத்தை இந்தியாவின் சுகோய்-30MKI ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com