பள்ளி மைதானத்தில் தூக்கில் தொங்கிய இந்திய வம்சாவளி மாணவி

இங்கிலாந்தில் உள்ள பள்ளி மைதானத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவி தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பள்ளி மைதானத்தில் தூக்கில் தொங்கிய இந்திய வம்சாவளி மாணவி
Published on

லண்டன்:

இங்கிலாந்து நாட்டின் லண்டனின் வடக்கு பகுதியில் ஹாம்ப்ஸ்டெட் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள ஹென்ரீட்டா பர்னெட் பள்ளியில் படித்து வந்தவர் எலினா மண்டல் (14). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

இவர் கடந்த வாரம் தன்னுடன் படிக்கும் தோழிகளிடம் தன்னையும் அவர்களது வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்கும்படி கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் எலினா மண்டலை சேர்க்க மறுத்துவிட்டனர். இதனால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்நிலையில், பள்ளி மைதானத்தில் எலினா மண்டல் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்ததை பள்ளி ஆசிரியர்கள் கண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com