மைனர் பெண்ணுடன் செக்ஸ் உறவு: சிங்கப்பூரில் தமிழருக்கு 10 மாதம் சிறை

மைனர் பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்து கொண்ட வழக்கில் அன்பழகன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 10 மாதம் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி கென்னத் யாப் தீர்ப்பு அளித்தார்.
மைனர் பெண்ணுடன் செக்ஸ் உறவு: சிங்கப்பூரில் தமிழருக்கு 10 மாதம் சிறை
Published on

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் படித்து வந்தவர் ஹரிகுமார் அன்பழகன் (வயது 25). தமிழர். அங்கு 18 வயதுக்குட்பட்ட மைனர் பெண் ஒருவர், தனக்கு செல்போன் வாங்கித்தருமாறு சமூக வலைத்தளம் ஒன்றில் கோரிக்கை விடுத்திருந்தார். அதைப் பார்த்த அன்பழகன், தான் வாங்கித்தருவதாக கூறினார். அத்துடன் தனக்கு பிரதியுபகாரமாக அந்த மைனர் பெண் என்ன தருவார் என கேட்டார்.

அந்தப் பெண்ணோ அவருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள முன்வந்தார். இதற்காக 70 சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.3 ஆயிரத்து 360) தர அன்பழகன் ஒப்புக்கொண்டார். அந்த மைனர் பெண் அவருடன் உறவு வைத்துக்கொண்டார். ஆனால் அன்பழகன் அந்தப் பெண்ணுக்கு பணம் தராமல் ஓடிவிட்டார்.

இதற்கிடையே அந்த மைனர் பெண்ணின் செயல்பற்றி அவர் படித்து வந்த பள்ளிக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அன்பழகன் மீது வழக்கு தொடரப் பட்டது.

விசாரணை முடிவில் அன்பழகன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 10 மாதம் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி கென்னத் யாப் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார். தீர்ப்பில் நீதிபதி, “நீங்கள் உங்களது செயலுக்காக மனம் வருந்தவில்லை. காயத்தின் மீது உப்பைத் தடவியது போல அந்த மைனர் பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டு குற்றம் செய்ததுடன், பணமும் கொடுக்காமல் ஓடி இருக்கிறீர்கள்” என சுட்டிக்காட்டி கண்டித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com