அரபிக்கடலில் விபத்துக்குள்ளான கடற்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

அரபிக்கடலில் விபத்துக்குள்ளான விமானத்தின் லேண்டிங் கியர், என்ஜின் பாகங்கள் உள்ளிட்ட சிதைந்த பொருட்களை கோவாவை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் கடற்படை மீட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை:

இந்திய கடற்படையின் விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் இருந்து கடந்த 26-ந் தேதி புறப்பட்ட மிக்29 கே பயிற்சி விமானம், அன்று மாலை 5 மணியளவில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் சென்ற 2 விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டார். நிஷாந்த் சிங் என்ற மற்றொரு விமானியை காணவில்லை.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் லேண்டிங் கியர், என்ஜின் பாகங்கள் உள்ளிட்ட சிதைந்த பொருட்களை கோவாவை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் கடற்படை மீட்டது.

ஆனால் மாயமான விமானி நிஷாந்த் சிங் பற்றி இன்னும் தகவல் தெரியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணியில் கடற்படையின் அதிவேகப் படகு உள்ளிட்ட 9 போர்க்கப்பல்களும், 14 விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் கடலோர போலீசாரும் தேடலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விமானியை பற்றி தகவல் அறிந்தால் தெரிவிக்கும்படி கோவா கடலோர மீனவ கிராமங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com